" alt="" aria-hidden="true" />
ப்ளஸ் 1 பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் வெற்றி பெற தமிழ்நாடு முஸ்லிம் லீக் வாழ்த்து இதுகுறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
தமிழ்நாடு மற்றும் புதுவையில் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இரு மாநிலங்களிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் வாழ்வில் பிளஸ் 1 பிளஸ் 2-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவையாகும்.
ஒரு மாணவர் எதிர்காலத்தில் என்னவாக உயரப் போகிறார் என்பதை பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். இதை உணர்ந்து மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். ஒரு பாடத் தேர்வுக்கும் அடுத்த பாடத்தேர்வுக்கும் இடையில் போதிய அளவு அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் அதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் சிறப்பாக தயாராக வேண்டும். தேர்வுக்காக படிக்கும் போதும் தேர்வு எழுதும் போதும் பதற்றத்தை தவிர்த்து கவனத்தை அதிகரிக்க வேண்டும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக இருக்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல் அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தேர்வில் மாணவ செல்வங்கள் மன வருத்தபடாமல் நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்று தேச நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என் கூறி உள்ளார்.